Close

Palani Mariyamman Kovil

Publish Date : 08/02/2022

செ.வெ.எண்:-10/2022

நாள்:06.02.2022

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான பழனி நகர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 28.01.2022 தேதி முகூர்த்தக்கால் நடுதல் மற்றும் 01.02.2022 திருக்கம்பம் சாட்டுதல் நடைபெற்றது.

எதிர்வரும் 08.02.2022-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 17.02.2022 வரையிலான 10 நாட்கள் மாசித் திருவிழா நாட்களாகும்.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கோவிட்-19 ஊரடங்கு நடப்பில் உள்ள நிலையில் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மேற்படி திருவிழா கீழ்காணும் விபரப்படி நடைபெறும்.

1. 08.02.2022-ம் தேதி கோவிட்-19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கொடியேற்றம் திருக்கோயில் பணியாளர்கள் மூலம் நடத்தப்படும்.

2. மாசித் திருவிழாவில் கொரோனா நோய்தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக அனைத்து மண்டகப்படிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி குறைந்த அளவு மண்டகப்படிதார்கள் மட்டும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

3. 15.02.2022-ம் தேதி கோவிட்-19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திருக்கல்யாணம் நடைபெறும்.

4. 16.02.2022-ம் தேதி மாலை 4.30 மணிக்கு கோவிட்-19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சுமார் 400 நபர்கள் கலந்து கொண்டு திருத்தேரோட்டம் நடைபெறும்.

5. கொரோனா நோய்தொற்று முன்னெச்சரிக்கை காரணமாக மாசித் திருவிழா நாட்களில் வண்டி மாகாளியம்மன் ஊர்வலம் மற்றும் பூச்சொரிதல் ஊர்வலம் நடைபெறாது.

மேலும், மேற்படி முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் திருக்கோவில் வளைதளம் மற்றும் யுடியூப் சேனல் மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.