Close

Palani Taluk-MT CAMP

Publish Date : 24/06/2022

செ.வெ.எண்:-64/2022

நாள்:22.06.2022

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களின் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் 29.06.2022 அன்று பழனி வட்டம், தாழையம் பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களின் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 29.06.2022 அன்று பழனி வட்டம், தாழையம் பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, மேற்கண்ட சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் தொடர்பாக அனைத்துத் துறை சார்ந்த கோரிக்கை மனுக்கள் பழனி வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் 24.06.2022-ஆம் தேதியன்று தாழையம் பாலாஜி திருமண மண்டபத்தில் பெறப்படவுள்ளது. எனவே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் தங்களது பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகளை மனுக்களாக பழனி வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.