Close

Palaniandavar College – Collector inspection

Publish Date : 13/10/2021
.

.

செ.வெ.எண்:-30/2021

நாள்:13.10.2021

ஒட்டன்சத்திரம் வட்டம், மந்தவாடி ஊராட்சி சின்னியகவுண்டன்வலசு கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பழனியாண்டவர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், மந்தவாடி ஊராட்சி சின்னியகவுண்டன் வலசு கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பழனியாண்டவர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு வருவதை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், மந்தவாடி ஊராட்சி, சின்னியகவுண்டன்வலசு கிராமத்தில் பழனியாண்டவர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பு ஆண்டு முதல் செயல்படும் என அறிவித்தார்கள். அதன்படி, மந்தவாடி ஊராட்சி, சின்னியகவுண்டன்வலசு கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பழனியாண்டவர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சின்னியகவுண்டன்வலசு கிராமத்தில் நடத்தப்படும் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பி.காம்., கணிப்பொறி அறிவியல்(பி.எஸ்சி.,), கணினி பயன்பாடுகள்(பி.சி.ஏ.), பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகள் நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் திருமதி ஆர்.சத்தியபுவனா, துணைத்தலைவர் திரு.பி.சி.தங்கம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.மு.முத்துச்சாமி, திரு.டி.ராஜாமணி உட்பட அலுவலர்கள் பலர் உடன் இருந்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.