Close

Panchayat President salary

Publish Date : 03/12/2021

செ.வெ.எண்:-08/2021

நாள்:02.12.2021

தமிழக சட்டசபையில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள், ஊரகப் பகுதிகளில் ஊராட்சி மன்றத் தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதால் ஊராட்சி மன்றத் தலைவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார்கள்.

இந்த அறிவிப்பின்படி அரசாணை (நிலை) எண்:132 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (பரா-4) துறை நாள்:15.11.2021 -இல் ஊராட்சி மன்றத் தலைவர்களின் மதிப்பூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.2,000-ம் ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டு நவம்பர் 2021 முதல் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.