Close

Parappalaru Dam TNPCB – Public Meeting

Publish Date : 10/03/2023
.

செ.வெ.எண்:-61/2023

நாள்:-28.02.2023

திண்டுக்கல் மாவட்டம், பரப்பலாறு அணையின் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை மேம்படுத்துவதற்காக பரப்பலாறு அணை மணல் மற்றும் வண்டல் மண் சுரங்கம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பரப்பலாறு அணையின் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை மேம்படுத்துவதற்காக பரப்பலாறு அணை மணல் மற்றும் வண்டல் மண் சுரங்கம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், வடக்காடு கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.02.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, ”பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அணை பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி பிரியங்கா, இ.ஆ.ப., அவர்கள், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் திரு.மணிமாறன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் திரு.எம்.காஜாமைதீன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.கு.கோபி, உதவி கோட்டப்பொறியாளர் திரு.நீதிபதி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.மு.முத்துச்சாமி, பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.