Close

PD DRDA Inspection @ Athoor Panchayat Union

Publish Date : 16/05/2023
.

செ.வெ.எண்:-47/2023

நாள்:-28.04.2023

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி திலகவதி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி திலகவதி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்த விவரம் வருமாறு:-

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், 2021-22-ஆம் ஆண்டில் 683 பணிகள் ரூ.43.58 கோடி மதிப்பீட்டிலும், 2022-23-ஆம் ஆண்டில் 414 பணிகள் ரூ.25.49 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 1097 பணிகள் ரூ.69.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகிறது.

ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், சித்தரேவு ஊராட்சியில் ரூ.5.61 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பள்ளி சமையல் கூடத்தினையும், மேலும், ரூ.11.77 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாயவிலைக் கடை புதிய கட்டடமும் பார்வையிடப்பட்டது. கட்டுமானப் பணிகள் மேற்கூரை அளவில் கட்டப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து, சித்தரேவு பகுதியில் ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம் பார்வையிடப்பட்டது. கட்டுமானப் பணிகள் 70 சதவீதம்(மேற்கூரை மட்டம்) முடிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அய்யங்கோட்டை ஊராட்சியில் ரூ.12.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாயவிலைக்கடை புதிய கட்டடம் பார்வையிடப்பட்டது.

தேவரப்பன்பட்டி ஊராட்சி பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பால் கொள்முதல் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டுமான பணிகள் பார்வையிடப்பட்டது.

மேற்கண்ட பணிகள் அனைத்தையும் தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி திலகவதி அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.தட்சிணாமூர்த்தி, திரு.ஏழுமலையான், ஒன்றிய பொறியாளர்கள் திரு.ராமநாதன், திரு.முருகபாண்டி, ஊராட்சி மன்றத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.