Close

Pledge Press Release

Publish Date : 23/05/2022
.

செ.வெ.எண்:-34/2022

நாள்:- 20.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா அவர்கள் தலைமையில் இன்று (20.05.2022) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா அவர்கள் கீழ்காணும் உறுதிமொழியினை வாசிக்க அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை எதிர்த்துப் போராடவும், நாம் உறுதி கூறுகிறோம். என அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.இரா.அமர்நாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா (கணக்கு) திரு.நாகரத்தினம், வட்டாட்சியர்கள், அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.