Close

plus 2 Examination Center – Collector Inspection

Publish Date : 07/05/2022
.

செ.வெ.எண்:-09/2022

நாள்:05.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல்லில் பிளஸ் 2 தேர்வு நடைபெறும் மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வுகள் இன்று(05.05.2022) தொடங்குகின்றன. திண்டுக்கல்லில் பிளஸ் 2 தேர்வு நடைபெறும் மையங்களில் திண்டுக்கல் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் நேருஜி நகரவை மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது-

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 10,646 மாணவர்கள் மற்றும் மாணவிகள் 11,429 என மொத்தம் 22,075 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அதற்காக 88 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் நல்ல காற்றோட்ட வசதி மற்றும் வெளிச்சம் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் அடிப்படை தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் அனைத்து தேர்வு மையங்களிலும் நிலையான படை அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கல்வித்துறை அலுவலர்கள் தலைமையிலும், வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையிலும் பறக்கும் படை அமைத்து தேர்வு மையங்களில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இரண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவியாக அவர்கள் சொல்வதை எழுதுவதற்காக 2 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.சீ.கருப்புசாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.