Close

PM KISSAN SAMMAN SCHEME

Publish Date : 14/06/2019

செ.வெ.எண்:-22/2019 நாள்:13.06.2019
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டம் – 24.02.2019 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6000/- நிதி உதவியானது, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000ஃ- வீதம் தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இத்திட்டம், தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் அதாவது, சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இதுவரை நிலமானது இறந்த தனது தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய இறப்புச்சான்று உடன் இறந்தவரின் வாரிசுதாரர், சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியரை அணுகி தேவையான ஆவணங்களுடன் உரிய முறையில் விண்ணப்பம் அளித்து 30.06.2019 தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து, அதன் அடிப்படையில் இந்த பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கென தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தி முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.