Close

PMFBY

Publish Date : 20/06/2019

செ.வெ.எண்:-36/2019 நாள்:20.06.2019
திண்டுக்கல் மாவட்டம்

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்கொள்ள தகுதிவாய்ந்த பணியாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணித் தேர்வு முகமை (Placement Agency) மூலம் நிரப்பிட திட்டமிடப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை பரிசோதனைகளை மேற்கொள்ள தகுதிவாய்ந்த பணியாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணித் தேர்வு முகமை (Placement Agency) மூலம் நிரப்பிட திட்டமிடப்பட்டுள்ளது. பணித்தேர்வு முகமை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய உள்ள பணியாளர் பயிர் அறுவடை பரிசோதனை தளைகளின் தேர்வுப்பணி, அறுவடைப்பணி மற்றும் அதைச் சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த இளநிலைபட்டப்படிப்பு / பட்டயப்படிப்புடன் கணிணி இயக்கதிறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் வேளாண்மைத்துறை மற்றும் புள்ளியியல் துறையில் பணிபுரிந்து இப்பணியை மேற்கொள்ள ஆர்வமுள்ள ஓய்வு பெற்ற அலுவலர்களும் தேர்வு செய்ய பரிசீலிக்கப்படுவர்

மேற்கண்ட பணியிடங்கள் யாவும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்;பட உள்ளது. தேர்ந்தெடுக்கும் பணியாளர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.10,000/- வீதம் பணித்தேர்வு முகமை மூலம் வழங்கப்படும்.

எனவே, இப்பணியினை மேற்கொள்ள தகுதிவாய்ந்த பதிவுத்துறைகளின் மூலம் பதிவு செய்து செயல்பட்டு வரும் பணிநியமன முகமைகள் (Placement Agency) பணியாளர்கள் தேர்வு செய்து வழங்க தங்களது முகமையின் அடிப்படை விவரங்கள் அனுபவம் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை வழங்க சேவைக் கட்டணம் ஆகியவற்றை 24.06.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேர்வு செய்யப்படும் முகமை உடனடியாக ஒப்பந்த பணியாளர்களை தேர்வு செய்து வழங்க வேண்டும். விண்ணப்பங்களை வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட ஆட்சித்தலைவர் கட்டிட வளாகம், திண்டுக்கல் (அஞ்சல்), திண்டுக்கல் மாவட்;டம் 624004. என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.