Close

PMFBY(Agri)

Publish Date : 20/06/2019

செ.வெ.எண்:-37/2019 நாள்:20.06.2019
திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் பகுதிவாரி அடிப்படையில் அனைத்து வட்டாரங்களிலும் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்கள் மற்றும் பிர்க்காகளில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் குறுவை – நெல், சோளம், கம்பு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, பாசிபயறு, நிலக்கடலை, எள் மற்றும் பருத்தி ஆகிய பயிர்களுக்கு அனைத்து விவசாயிகளும் (குத்தகைகாரர்கள் உட்பட) பயிர்காப்பீடு செய்து பயன் பெறலாம்.

விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்து போதல், விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள காலத்திலும், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு, புயல், மழை, மண்சரிவு, வெள்ளம் போன்ற இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர் கடன் பெறும் விவசாயிகள் தங்கள் கடன் பெற உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் காப்பீடு செய்யலாம்.

பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள் பிரீமியத் தொகையாக ஒரு ஏக்கர்க்கு நெல் – ரூ.540, மக்காச்சோளம் – ரூ.450, சோளம் – ரூ.158, கம்பு – ரூ.160 ஆகியவற்றை 16.08.2019 க்குள் செலுத்த வேண்டும். மேலும் ஒரு ஏக்கருக்கு உளுந்து – ரூ.315, பாசிபயறு – ரூ.315, துவரை -ரூ.315, நிலக்கடலை -ரூ.400, எள் -ரூ.147 மற்றும் பருத்தி -ரூ.1098 ஆகியவற்றை பிரீமியத் தொகையாக 30.09.2019 -க்குள் செலுத்த வேண்டும்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் மேற்க்குறிப்பிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ள நடப்பில் உள்ள வங்கி சேமிப்புக் கணக்குபுத்தக முதல் பக்க நகல், அடங்கல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் இதர வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய காப்பீட்டு பிரீமியத் தொகையை உரிய காலக்கெடுக்குள் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்திலுள்ள அலுவலர்களை தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.