Close

PMJAY-Child Protection

Publish Date : 30/05/2022
.

செ.வெ.எண்:-55/2022

நாள்:30.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோர் இருவரையும் இழந்த 13 குழந்தைகளுக்கு மாண்புமிகு பாரத பிரதமரின் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சத்திற்கான நிவாரண நிதியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள், கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாண்புமிகு பாரத பிரதமரின் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் தலா ரூ.10,00,000-ற்கான (பத்து இலட்சம் ரூபாய்) கொரோனா நிவாரணநிதி வழங்கும் துவக்க விழா நிகழ்வு இந்தியா முழுவதும் காணொலி காட்சி வாயிலாக இன்று(30.05.2022) நடைபெற்றது.

இதனை திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றால் பெற்றோர்களை இழந்த 13 குழந்தைகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்கள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் ஆகியோர் காணொலி காட்சியினை பார்வையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(30.05.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றால் பெற்றோர்களை இழந்த 13 குழந்தைகளுக்கு மாண்புமிகு பாரத பிரதமரின் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் தலா ரூ.10 இலட்சத்திற்கான கொரோனா நிவாரணநிதி அஞ்சலகத்தில் செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ், ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆண்டிற்கு ரூ.5 இலட்சம் அளவில் மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் பயனாளிகளுக்கு பிரதம மந்திரி அவர்கள் எழுதிய கடிதம் ஆகியவை அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு. ந.சிவக்குமார், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் திரு.சரவணக்குமார், திருமதி.அம்பிளியா, திருமதி எலிசிபாய், திருமதி ஜெயசுதா, இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் திருமதி சரவணலட்சுமி, திருமதி மலர்விழி ரவீந்திரன், பயனாளி குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.