PMKSNY Scheme collector Inspection

Publish Date : 10/07/2019
2

செ.வெ.எண்:27/2019 நாள்:09.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் பலக்கனூத்து, ரெட்டியார்சத்திரம் கிராம நிர்வாக அலுவலகங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விவசாயிகள் பயன்பெறும் விதமாக மத்திய அரசால் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதிஉதவித்திட்டம் (PM KISAN SAMMAN NIDHI YOJANA) கடந்த – 24.02.2019 முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பெற்றவர்களை தவிர்த்து மீதமுள்ள தகுதியான அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், சார் ஆட்சியர்/கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 வரை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

அதில், மேற்கண்ட திட்டத்தின்கீழ்; ஒட்டன்சத்திரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் பலக்கானூத்து கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ரெட்டியார்சத்திரம் கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவைகளில் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது அலுவலர்களிடம் விவாசயிகளிடமிருந்து பெறப்பட்ட மனு தொடர்பான விபரங்கள், இதுவரை எத்தனை விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்தும், அதற்கென பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, தகுதியுள்ள எந்தவொரு விவசாயிகளும் விடுபடாமல், இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கு ஏதுவாக பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.