Close

PMNAM Skill Training – Camp

Publish Date : 11/03/2025

செ.வெ.எண்:-23/2025

நாள்:-07.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 10.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இந்திய அரசு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் இயக்குநரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக, திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (Pradhan Mantri National Apprenticeship Mela (PMNAM)-MAR-2025) திண்டுக்கல், நத்தம் சாலை, குள்ளனம்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 10.03.2025 (திங்கட்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் திண்டுக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான தொழிற்பிரிவுகளில் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க, பயிற்சியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த முகாமில் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.8,050 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும்.

எனவே, இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காத அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும், முன்னணி நிறுவனங்களில் ஊக்கத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதம மந்திரி இண்டான்ஷிப் திட்டத்தில் வயது 21 முதல் 24 வரை உள்ள 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமா மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு ஓராண்டு கால தொழிற்பயிற்சி வழங்கி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 10.03.2025 (திங்கட்கிழமை) காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும், www.pminternship.mca.gov.in என்ற இணைதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 0451-2970049 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.