Police Department Postal Vote

Publish Date : 11/04/2019
1

2 3 4 5

செ.வெ.எண்:- 10/2019 நாள்:- 10.04.2019
திண்டுக்கல் மாவட்டம்

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தல் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல்துறையை சார்ந்த பணியாளர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் பணிகளை – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், காவல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தல் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவல்துறையை சார்ந்த பணியாளர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் பணிகளை இன்று (10.04.2019) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

நடைபெறவுள்ள திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அனைத்து அலுவலர்களும் 100 சதவீதம் வாக்கு செலுத்தும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது. அதனடிப்படையில் கடந்த 07.04.2019 அன்று வாக்கு மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாமில் தபால் வாக்கு செலுத்துவதற்க்கான பணிகள் மற்றும் அனைத்து அலுவலர்களுக்கும் தேர்தல் பணிச்சான்று வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் நாளன்று காவல்துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் இன்று தபால் வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர் சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த 1501 காவல்துறையை சார்ந்த அலுவலர்களுக்கு திண்டுக்கல் ஆயுத படை மைதானத்திலும், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய சட்டமன்ற தொகுதியை சார்ந்த 396 காவல்துறை அலுவலகள் பழனி பட்டாலியன் மைதானத்திலும், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியை சார்ந்த 179 காவல்துறை அலுவலர்களுக்கு வேடசந்தூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்திலும் ஆக மொத்தம் 2076 காவல்துறையை சார்ந்த அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் விடுப்பட்டவர்கள் அஞ்சல் மூலமாக வாக்கு எண்ணிக்கை நாளான 23.05.2019 அன்று காலை 08.00 மணிக்குள் வந்து சேரும் வகையில் தபால் வாக்கினை அனுப்பி வைக்க வேண்டும்.

காவல்துறையை சார்ந்த அலுவலர்கள் தபால் வாக்கினை சரியான முறையில் செலுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அலுவலர்கள் மூலமாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அனைத்து அலுவலர்களும் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவி;த்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஜீவா மற்றும் ஏராளமான காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.