Close

Polling Officers 2nd level Training

Publish Date : 08/04/2019
1

5 4 2 3

செ.வெ.எண்:-07/2019 நாள்:-07.04.2019
திண்டுக்கல் மாவட்டம்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்குமையத்தில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்ற மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு மையத்தில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கான, இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை இன்று (07.04.2019) திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது.

நடைபெறவுள்ள திண்டுக்கல் நாடாளுமன்ற பொது தேர்தல் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்கு மையத்தில் ஒரு வாக்குசாவடி தலைமை அலுவலர் மற்றும் 3 வாக்குசாவடி அலுவலர் என திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் (வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட) 10,708 நபர்கள் வாக்கு மையத்தில் பணியில் ஈடுபட உள்ளனர். நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் உள்ள வாக்கு மையத்தில் மட்டும் கூடுதலாக ஒரு வாக்குசாவடி அலுவலர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கடந்த 23.03.2019 அன்று வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட பயிற்சி இன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட தேர்தல் நாள் அன்று வாக்கு மையத்தில் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியை சார்ந்த அலுவலர்களுக்கு, கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தபால் வாக்கு செலுத்தும் வகையில் தபால் வாக்கு பெட்டி வைக்கபட்டது.

இதே போன்று நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியை சார்ந்த அலுவலர்களுக்கு, நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் தபால் வாக்கு செலுத்தும் வகையில் தபால் வாக்கு பெட்டி வைக்கபட்டது. மேலும், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியை சார்ந்த அலுவலர்களுக்கு தேர்தல் பணிச்சான்று வழங்கபட்;டுள்ளது. தேர்தல் பணி சான்றினை காண்பித்து அலுவலர்கள் பணிபுரியும் வாக்கு மையத்தில் வாக்கு செலுத்தவும் நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட பயிற்சியில் கலந்து கொண்ட அலுவலர்கள் தேர்தல் அன்று வாக்கு மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அளிக்கப்பட்ட பயிற்சியை நன்கு புரிந்து கொண்டு, வாக்கு மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி எந்த ஒரு விதிமீறலுமின்றி தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது நத்தம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.முத்துகலுவன், நத்தம் வட்டாட்சியர் திரு.ஜான்பாஸடின் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்