Close

Pongal Gift Distribution

Publish Date : 03/01/2022

செ.வெ.எண்:02/2022

நாள்:03.01.2022

கரும்புடன் கூடிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு 04.01.2022-ஆம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விநியோகிக்கப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு கரும்புடன் கூடிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு 04.01.2022-ஆம் தேதி முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்க தமிழக அரசால் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக நெரிசலைத் தவிர்க்கும்பொருட்டு அந்தந்த நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளின் அடிப்படையில் தெரு வாரியாக சுழற்சிமுறையில் (Staggering System) நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பரிசு தொகுப்பு வழங்குவதற்கு முன்னதாகவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் நிர்ணயம் செய்து டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

மேலும் பொங்கல் 2022-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் புகார்கள் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0451-2460097 என்ற எண்ணிற்கு அலுவலக வேலைநாளில் வேலை நேரத்தில் புகார்கள் அளிக்கலாம்.

அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைவருக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதால், குடும்ப அட்டைதாரர்கள் நெரிசலை தவிர்த்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் நியாய விலைக்கடைக்குச் சென்று தங்களுக்குரிய நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.