Close

Pongal Gift

Publish Date : 07/01/2022

செ.வெ.எண்:-16/2022

நாள்:-06.01.2022

பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கீழ்காணும் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம், மஞ்சள்தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலை பருப்பு 250 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், ரவை 1 கிலோ, கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 500 கிராம், துணிப்பை ஒன்று, முழுக் கரும்பு ஒன்று ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு 04.01.2022 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1035 நியாயவிலைக் கடைகளில் உள்ள 669440 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 04.01.2022 முதல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இப்பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட ஏதுவாக 750 கார்டுகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளில் உள்ள 355280 நபர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கும் நாள் மற்றும் நேரம் குறித்து டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. நாளது தேதியில் 287484 குடும்ப அடடைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதுடன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றவுடன் அனைத்து பொருட்களையும் சரிபார்த்து எடுத்துச் செல்ல அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.