Press Meet (Election)

Publish Date : 11/03/2019

செ.வெ.எண்:-15/2019 நாள்:11.03.2019
திண்டுக்கல் மாவட்டம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து – திண்டுக்கல் மாவட்ட தேர்தல்; அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்இ.ஆ.ப. அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தகவல்.

இந்திய தேர்தல் ஆணையம்,தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019-க்கான கால அட்டவணையை பின்வருமாறு வெளியிட்டுள்ளது:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள்                                        10-03-2019
தேர்தல் நடத்தை விதிகள் அமுல்படுத்தப்பட்ட நாள்     10-03-2019
வேட்புமனு தாக்கல் செய்தல் துவங்கும் நாள்                    19-03-2019
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்                            26-03-2019
வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் நாள்           27-03-2019
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள்                                 29-03-2019
வாக்குப்பதிவு நாள்                                                                         18-04-2019
வாக்கு எண்ணிக்கை நாள்                                                         23-05-2019

மேற்குறித்த கால அட்டவணையின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 22.திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதிக்கான பொதுத் தேர்தல் மற்றும் 130-நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களும் நடைபெற உள்ளன. 22.திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி பொதுத்தேர்தலுக்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், 130-நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கு திண்டுக்கல் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி ஜீனத் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் இந்திய தேர்தல் ஆணையத்தினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். தேர்தல் நடத்தை விதிகள் 10-03-2019-ம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 2097 வாக்குச்சாவடிகளில் 137 வாக்குச்சாவடிகள் எரடநெசயடிடந என்றும் 148 வாக்குச்சாவடிகள் உசவைiஉயட என்றும் அறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு மத்திய அரசு அலுவலர்களை ஆiஉசழ ழுடிளநசஎநச-களாக நியமித்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் Presiding Officer, PO-1, PO-2, PO-3 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மட்டும் PO-4 ஆக பணிபுரிவதற்காகவும் மொத்தம் 10385 பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

தேர்தல் பணிகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிப்பதற்காக, தேர்தல் சம்பந்தப்பட்ட 22 பணிகளுக்கும், தனித்தனியே ஒவ்வொரு Nodal Officer நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 204 மண்டலங்களுக்கும் உரிய ணுழயெட ழுககiஉநசள நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். தேர்தல் நடத்தை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வதற்காக 24 பறக்கும்படைகள், 24 Static Surveillance teams, 16 Video Surveillance Teams, 8 Video Viewing Team, 8 Accounting Team, 8 Assistant Expenditure Observer ஆகிய குழுக்களில் உரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

பொதுமக்களின் வசதிக்காக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தினசரி 24 மணிநேரமும் இயங்கும் வகையில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தை தொடர்பு கொள்வதற்கான கட்டணமில்லா தொலைபேசி இணைப்பு எண் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். அதுவரையில், 0451-2460500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும்,வாக்காளர்களின் வசதிக்காக cVIGIL என்ற செயலி இந்திய தேர்தல் ஆணையத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக புகார் ஏதும் தெரிவிக்க பொதுமக்கள் விரும்பினால், இந்த மொபைல் ஆப் மூலம் தங்களது புகாரினை புகைப்பட, வீடியோ ஆதாரத்துடன் மொபைலிலிருந்து அனுப்பலாம். இந்த செயலிமூலம் பெறப்படும் அனைத்து புகார்களும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சற்றும் தாமதமின்றி அனுப்பப்பட்டு, கள ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக முடிவு செய்யப்படும். புகார் தெரிவிப்பவர் விரும்பினால் அவரது பெயர், முகவரி போன்ற விபரங்களை அளித்தால், புகாரின்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, புகார்தாரருக்கு உடனுக்குடன் மொபைலில் தகவல் தெரிவிக்கப்படும். தன்னைப் பற்றிய தகவல் தெரிவிக்க விரும்பவில்லை என்றாலும், புகார் உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு கள ஆய்வு செய்யப்பபட்டு முடிவு செய்யப்படும்.

வாக்காளர்கள் எவ்வித சிரமமோ அச்சமோ இன்றி நியாயமாக நேர்மையாக வாக்களிப்பதற்காக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வுதளம், குடிநீர், மின்சாரம் போன்ற தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் உரிய காலத்தில் செய்துதரப்படும்.

நடைபெறவிருக்கும் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஆகியவற்றில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் “வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரம்” (VVPAT) பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கென அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் உரிய பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தவும் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு முகாம்களும் செயல்முறை விளக்கங்களும் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

வாக்காளர் பட்;டியலைப் பொறுத்தவரையில், 31-01-2019-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 17,68,853 வாக்காளர்கள் (ஆண் – 8,66,715, பெண் – 9,01,984, இதரர் – 154) இடம் பெற்றார்கள். அதற்குப்பின், இன்று வரையில் மொத்தம் 25,822 விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன. விரைவில் அனைத்து மனுக்களும் முடிவு செய்யப்படும். மேலும், இந்த தேர்தலானது Accessible Elections என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரையில் 9,082 மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். வாக்காளர் அடையாள அட்டை கைவசம் வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள்,“pwd app” என்ற செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து தாங்களாகவே வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துகொள்ளலாம். இதன்மூலம் வாக்குப்பதிவு நாளன்று அவர்கள் எவ்வித சிரமமுமின்றி நியாயமாக நேர்மையாக வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

வாக்காளர் பட்டியலில் இதுவரை சேர்க்கப்படாத, தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் எவரும் இருப்பின், 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தகவல் கொடுத்தால், அவரது வீட்டிற்கே வாக்குச்சாவடி நிலை அலுவலர் அனுப்பப்பட்டு உரிய படிவத்தில் மனுப் பெற்றுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள், தேர்தல்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காகவும், கருத்துகளை தெரிவிப்பதற்காகவும், புகார் தெரிவிப்பதற்காகவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘1950’ என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை இயங்குகிறது. அலுவலக வேலை நாட்களில் காலை 09-00 மணிமுதல் இரவு 09-00 மணிவரை இந்த ‘மாவட்ட தொடர்பு மையம்- District Contact Centre” இயங்கும். பொதுமக்கள் தங்களது கருத்துக்கள், சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்காக இந்த மையத்தை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ளும் அனைவரின் உரையாடல்களும் பதிவு செய்யப்படும்.

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதிக்கான பொதுத் தேர்தல் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களுக்கும் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம் சில்வார்பட்டி கிராமத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரியானது வாக்கு எண்ணிக்கை மையமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நியாயமான, நேர்மையான வாக்குப்பதிவினையும், 100% வாக்குப்பதிவு என்ற நோக்கத்தினையும் செயல்படுத்துவதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல்; அலுவலர், 22.திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்