Close

Public Account’s Commitee-Dindigul

Publish Date : 17/12/2020

செ.வெ.எண்:-16/2020

நாள்:- 16.12.2020

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழு (2018-2021) வருகின்ற 17.12.2020 மற்றும் 18.12.2020 ஆகிய இரு நாட்களில் பொதுக்கணக்குக் குழு தலைவர்
திரு. துரைமுருகன் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழு (2018-2021) வருகின்ற 17.12.2020 மற்றும் 18.12.2020 ஆகிய இரு நாட்களில் பொதுக்கணக்குக் குழு தலைவர் திரு.துரைமுருகன் (காட்பாடி சட்டமன்ற உறுப்பினர்) தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக் கணக்குக் குழு (2018-2021) 19 உறுப்பினர்களை உள்ளடக்கிய, இந்த ஆய்வுக் குழுவில் உறுப்பினர்களுடன், பேரவை அலுவலர்களையும் சேர்த்து 25 நபர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இக்குழுவினர் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் தணிக்கை பட்டியல் குறித்து மாவட்டத்தில் உள்ள உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடவும் மற்றும் இது தொடர்பான திட்டப்பணிகளை பார்வையிட உள்ளனர்.

இக்குழு திண்டுக்கல் மாவட்டத்தில், திட்ட பணிகளை ஆய்வு செய்தபின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.