Close

Pulse Polio Camp

Publish Date : 28/02/2022
.

செ.வெ.எண்:-52/2022

நாள்:-27.02.2022

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் போலியே சொட்டு மருந்து முகாமில் 1,94,958 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது – திண்டுக்கல் மாநகராட்சி கமலாநேரு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமினை, திண்டுக்கல் மாநகராட்சி கமலா நேரு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(27.02.2022) தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, அனைத்து குழந்தைகளுக்கும்(பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட) போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று(27.02.2022) (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரே தவணையாக நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,313 மையங்களில் இன்ற காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 0-5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் மையங்களிலும், 28 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களிலும், 51 போக்குவரத்து முகாம்களிலும் ஒரே தவணையாக போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பணிக்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த 5,276 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 1,94,958 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. அதற்காக 2,56,000 டோஸ் மருந்து தயாராக உள்ளது.

பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை எத்தனை முறை சொட்டுமருந்து அளித்திருந்தாலும், இம்முறை கூடுதல் தவணையாக போலியோ சொட்டுமருந்து வழங்கி, பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாப்பதுடன், போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில், துணை இயக்குனர்(சுகாதாரப் பணிகள் – திண்டுக்கல்) மரு.மு.வரதராஜன், நகர் நல அலுவலர் மரு.இந்திரா உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.