Close

Red Cross – Supply of Oxygen cylinder

Publish Date : 21/09/2021
.

செ.வெ.எண்:-37/2021

நாள்:21.09.2021

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின் சார்பில் 12 அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தலா ஒரு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்கள்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட ரெட்கிராஸ் தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின் சார்பில் 12 அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தலா ஓரு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கி தெரிவித்ததாவது:-

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின் சார்பில் கொரோனா தொற்று நோயை எதிர்கொள்ளும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 12 அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தலா ஒரு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வீதம் ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான 12 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை ஆத்தூர், ஆயக்குடி, வத்தலக்குண்டு, கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, பண்ணைக்காடு, பட்டிவீரன்பட்டி, தாண்டிக்குடி, வேடசந்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், ரெட்கிராஸ் அவைத்தலைவர் திரு.NMB.காஐh மைதீன், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் Dr.பூங்கோதை, ரெட்கிராஸ் துணைத்தலைவர் முனைவர் சரவணன், Dr.ஆசைதம்பி, துணை அவைத்தலைவர் சேக்தாவூத், மாவட்ட செயலர் M.A.சையது அபுதாஹீர், பொருளாளர் சுசிலாமேரி, இணைச்செயலர்கள் ரெட்கிராஸ் உறுப்பினர்கள், மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.