Close

Republic Day Celebration

Publish Date : 30/01/2024
.

செ.வெ.எண்: 59/2024

நாள்:26.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சார்ந்த 121 அலுவலர்களுக்கும், அரசுத் துறைகளைச் சார்ந்த 180 அலுவலர்களுக்கும் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ், 156 பயனாளிகளுக்கு ரூ.56.52 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(26.01.2024) காலை 08.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டார். திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் டாக்டர் அபினவ் குமார், இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. முதலமைச்சர் காவலர் பதக்கம் 61 பேருக்கும், சிறப்பாக பணிரிந்த காவல்துறையினர் 60 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து விடுதலைப்போராட்ட தியாகிகள், தியாகிகளின் வாரிசுதாரர்கள், மொழிப்போர் தியாகிகள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து, கொளரவித்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், பேரூராட்சித்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவுத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, நில அளவை மற்றும் பராமரிப்புத்துறை, கல்வித்துறை, மருத்துவக் கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மீன்வளம் மற்றும மீனவர் நலத்துறை, வனத்துறை, புள்ளியியல் துறை, போக்குவரத்துத்துறை, பால்வளத்துறை, உள்ளாட்சி நிதித்தணிக்கைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை என மொத்தம் 180 அலுவலர்களை பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இவ்விழாவில், முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில் போர் நிகழ்வுகளில் மரணம் அடைந்த ஊனமுற்றவர்களின் வாரிசுகளுக்கு வருடாந்திர பராமரிப்பு திட்டத்தில் இரண்டு பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி 2 பயனாளிகளுக்கு ரூ.2.12 லட்சம் மதிப்பிலும், வருவாய் துறை சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 10 பயனாளிகளுக்கு நிவாரணம் ரூ.10.00 லட்சம் மதிப்பிலும், இலவச வீட்டு மனை பட்டா 15 பயனாளிகளுக்கு ரூ.8.00 லட்சம் மதிப்பிலும், சமூக பாதுகாப்பு திட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.2.31 இலட்சம் மதிப்பிலும், சமூக நலத்துறை சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் இரண்டு பயனாளிகளுக்கு ரூ.12,552 மதிப்பிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் ஐந்து பயனாளிகளுக்கு ரூ.27,900 மதிப்பிலும், வேளாண்மை துறை சார்பில் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மின்கல தெளிப்பான் இரண்டு பயனாளிகளுக்கு ரூ.5,146 மதிப்பிலும், மகளிர் திட்டத்தின் தமிழ்நாடு மாநில ஊராக வாழ்வாதார இயக்கம் சார்பில் 39 பயனாளிகளுக்கு ரூ.24.50 இலட்சம் மதிப்பிலும், தோட்டக்கலைத் துறை சார்பில் சிற்பம் கட்டும் அறை திட்டத்தில் 2 பயனாளிகளுக்கு ரூ.4.00 லட்சம் மதிப்பிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் ஓய்வூதியம் திட்டத்தில் 52 பயனாளிகளுக்கு ரூ.2.14 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 156 பயனாளிகளுக்கு ரூ.56.52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், வேடசந்துார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, பிள்ளையார்நத்தம் அனுக்கிரகா இன்டர்நேசனல் மேல்நிலைப்பள்ளி, வடமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் எம்எஸ்பி சோலை நாடார் மேல்நிலைப்பள்ளி என 5 பள்ளிகளைச் சார்ந்த 468 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கண்கவர் கலைநிகழ்ச்சியை நடத்தினர். நிறைவாக கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், மாலை அணிவித்து, மலர் துாவி மாரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட வன அலுவலர் திரு.ராஜ்குமார், இ.வ.ப., மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திரு.மு.பாஸ்கரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (இணை இயக்குநர்) திட்ட இயக்குநர் திரு.நா.சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.கா.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திருமதி மு.ராணி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.கமலக்கண்ணன், வட்டாட்சியர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.