Close

Republic Day celebration

Publish Date : 27/01/2022
.

..

.

செ.வெ.எண்:-44/2022

நாள்:-26.01.2022

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 73-வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து, மரியாதை செலுத்தி, சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை மற்றும் அரசு துறையைச் சார்ந்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று(26.01.2021) 73-வது குடியரசு தினவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் காலை 8.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர், சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்களும், வண்ண பலூன்களும் பறக்கவிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற காவல் துறை, ஊர்க்காவல் படை, என்.சி.சி., வீரர்களின் அணி வகுப்பு மரியாதையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏற்றுக்கொண்டார்.

மேலும், காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 68 அதிகாரிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் முதல்வர் பதக்கமும், காவல்துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 596 அலுவலர்கள் மற்றும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த முன்களப்பணியாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து சுதந்திரப்போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று பொன்னாடை அணிவித்து கௌரவித்து சிறப்பு செய்தார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.ரூபேஸ்குமார் மீனா, இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., உதவி ஆட்சியர்(பயிற்சி) திருமதி சி.பிரியங்கா,இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர் திரு.எஸ்.பிரபு, இ.வ.ப., மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.மு.பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ்,திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி ம.காசிசெல்வி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ச.முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.சி.மாறன், துணை ஆட்சியர்(பயிற்சி) திரு.இரா.இரா.விஸ்வநாதன், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் தனி அலுவலர் மரு.கே.கே.விஜயகுமார், இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) மரு.த.கி.பாக்கியலட்சுமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.வீ.பழனிகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி எம்.ரோஸ் பாத்திமா மேரி உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.