Close

Collector-ITI Admission

Publish Date : 06/07/2021

செ.வெ.எண்:-05/2021

நாள்:-03.07.2021

தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும், மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கைக்கான உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் சேர எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பக்கட்டண தொகையாக ரூ.50/- விண்ணப்பதாரர் Debit Card/ Credit Card/ Net Banking / G-Pay வாயிலாக செலுத்தலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை 28.07.2021-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பின்னர் இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும், இத்தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் “முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், நத்தம் மெயின் ரோடு, குள்ளனம்பட்டி, திண்டுக்கல்” அவர்களை அணுகி தெரிந்துகொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 0451-2471412 மற்றும் 0451-2471411 ஆகிய தொலைப்பேசி எண்களிலோ அல்லது 9499055761, 9499055762, 9789789927, 8667488482, 8248047166 ஆகிய அலைபேசி எண்களிலோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.