Right to Information Act (Commissioner) Meeting

Publish Date : 02/05/2019
1

2

செ.வெ.எண்:- 24/2019 நாள்:- 29.04.2019
திண்டுக்கல் மாவட்டம்

தகவல் பெறும் உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாநில தகவல் ஆணையர் முனைவர் ரா.பிரதாப் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (29.04.2019) தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில், தகவல் பெறும் உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்., இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாநில தகவல் ஆணையர் முனைவர் ரா.பிரதாப் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில தகவல் ஆணையர் அவர்கள் தெரிவித்ததாவது:-

பொதுமக்கள் அரசிடமிருந்து தேவையான தகவல்களை பெறுவதற்காக உரிமைகள் வழங்கப்பட்;டுள்ளன. பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலக பொது தகவல் அலுவலர்கள் மனுதாரர்களின் மனுவை சரிவர படித்து விதிகளின்கீழ் முறையாக குறிப்பிட்ட காலத்தில் பதில் தரவேண்டும். அவ்வாறு இல்லாமல் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்கீழ், மனுக்களுக்கு குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் பதில் அளிக்காத அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்க வழிமுறைகள் உள்ளது.

மேலும், பொது தகவல் அலுவலர்கள் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்கீழ் முக்கிய விதிகளின் பிரிவுகளான 6(1), 6(3), 19(1), 19(3), 18(1), 5(5), 7(1), 19(6), 7(6), 7(9), 8(1), 8(1)(h), 8(1)(த), 2(க), 11, 18(3)(டி), 19(8)(ய)(ii), 19(8)(டி), 20(1), 20(2), 19(7) ஆகியகளின்கீழ் விதிமுறைகளை முழுமையாக அறிந்து கொண்டு, அதனை கருத்தில் கொண்டு, மனுதாரர்களின் மனுவிற்கு முறையாக பதில் அளிக்க வேண்டும்.

ஆகவே, பொதுமக்கள் தகவல் பெறும்; உரிமைச்சட்டத்தின்கீழ் கோரப்படும் தகவல்களை சரியாகவும், முறையாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிப்பது பொது தகவல் அலுவலர்களின் கடமையாகும். எனவே, விதிமுறைகளுக்குட்பட்டு சரிவர தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை மட்டும் கோரும்படியும், அலுவலர்களின் நேரத்தை வீணடிக்காமாலும் மற்றும் தனிபட்ட காரணங்களுக்காக தகவல் பெறும்; உரிமைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தகவல் பெறும் உரிமைச்சட்டம் குறித்த தகவல் அடங்கிய நகல்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரதிகளை பொதுமக்கள் பெற்று பயன்பெறும் வகையில், அனைத்து துறை பொது தகவல் அலுவலர்களிடம் வழங்கப்;பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு மாநில தகவல் ஆணையர் முனைவர் ரா.பிரதாப் குமார் அவர்கள் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் முக்கிய விதிகள் பற்றி மாநில தகவல் ஆணையர் அவர்களால் எடுத்துரைக்கபட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்கீழ் மனுதார்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு சந்தேகங்கள் குறித்து மாநில தகவல் ஆணையரிடம் கேட்டறிந்தனர்.

இக்கூட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை (மாவட்ட வருவாய் அலுவலர்) திரு.ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ஆ.ராஜ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.கருப்iயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.