Close

RJD – Animal Husbandry-CAMP

Publish Date : 31/01/2022

செ.வெ.எண்:-50/2022

நாள்:-31.01.2022

கால்நடை நிலையங்களில் 01.02.2022 முதல் 14.02.2022 வரை கோழிக்கழிச்சல் நோய்த்தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

ஒவ்வொரு ஆண்டும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் கோழிக்கழிச்சல் நோய்த்தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் 01.02.2022 முதல் 14.02.2022 வரை இந்த முகாம் அந்தந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட கால்நடை நிலையங்களில் நடைபெற உள்ளது.

இது சமயம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி வளர்க்கும் பயனாளிகள் அனைவரும் அவர்களது கிராமத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள கால்நடை நிலையங்களில் தங்கள் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய்த்தடுப்பூசி இலவசமாக போட்டு, தங்களது கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் வராமல் பாதுகாத்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.