Road Safety
செ.வெ.எண்:-80/2021
நாள்:30.11.2021
அபாயகரமான சாலை விபத்துகளில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி ஒரு மணி (Golden Hour) நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடனடி மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்து அவர்களின் உயிர்களைக் காப்பாற்றும் நட்கருணை மனிதர்களுக்கு அவர்களுடைய பணியினை பாராட்டி அவர்களை கௌரவிக்கும் விதமாக பணப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் புதிய திட்டம் மத்திய அரசால் 15.10.2021-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு உதவி செய்யும் பொதுமக்களுக்கு / நட்கருணை மனிதர்களுக்கு தலா ரூ.5000/- பணப்பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள நபர்களைத் தேர்ந்தெடுக்க மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மதிப்பீட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டுக் குழுவானது தகுதியுள்ள நபர்களைத் தேர்ந்தெடுந்து மாதந்தோறும் முன்மொழிவு பட்டியலை போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பி வைக்கும். போக்குவரத்து ஆணையர் அவர்களால் பணப்பரிசு ரூ.5000/- சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். மேலும் நற்சான்றிதழும் வழங்கப்படும்.
பின்னர் மாநில அளவிலான மதிப்பீட்டுக் குழு ஆண்டு ஒன்றுக்கு மூன்று நபர்களைத் தேர்வு செய்து தேசிய அளவில் பரிசு பெறுவதற்கு அனுப்பி வைக்கும். இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்வு செய்து வரப்பெற்ற நபர்களில் 10 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நபர் ஒன்றுக்கு தலா ஒரு லட்சம் பணப்பரிசும், சான்றிதழும் சாலை பாதுகாப்பு மாதத்தில் டில்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் எனவும், இத்திட்டம் 31.03.2026 வரை அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.