Close

Rotary Club – Bike Rally

Publish Date : 15/11/2021
.

செ.வெ.எண்:-28/2021

நாள்:13.11.2021

ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல், ரோட்ராக்ட் கிளப் ஆப் விஜய் இன்ஸ்டீட் இணைந்து தளிர் நண்பர்கள் மரம் நடும் குழு வாயிலாக 1 இலட்சம் வேம்பு விதைப்பந்துகள் விதைக்கும் திட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இன்று(13.11.2021) துவக்கி வைத்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தை பசுமை மிகுந்த மாவட்டமாக மாற்றுவதற்கு மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும், தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டும், மர விதைகள் விதைக்கப்பட்டும் வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தை பசுமை மிகுந்த மாவட்டமாக மாற்றிட மாவட்ட நிர்வாகமும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து மரங்கன்றுகளை நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில், ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல், ரோட்ராக்ட் கிளப் ஆப் விஜய் இன்ஸ்டீட், தளிர் நண்பர்கள் இணைந்து 50,000 விதைப்பந்துகள் மூலம் 1 இலட்சம் வேம்பு மரங்கள் நடும் திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.சீனிவாசன்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு.எஸ்.பிரபு, இ.வ.ப., ரோட்ராக்ட் கிளப் தலைவர் திரு.ஏ.மணிகண்டன், செயலர் திரு.சி.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று(13.11.2021) மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருசக்கர மோட்டார் சைக்கிள் வாகனத்தில் சென்று நடவு செய்ய உள்ளதை, கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தை பசுமை மிகுந்த மாவட்டமாக மாற்றிட அரசு நிர்வாகமும், ரோட்ராக்ட் கிளப் ஆப் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் பசுமையாக்கும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாநகராட்சி சுற்றியுள்ள சுமார் 5 கி.மீட்டருக்கும் மேற்பட்ட பரப்பளவில், குறிப்பாக திண்டுக்கல் மாநகராட்சியிலிருந்து, கிராமங்களுக்கு செல்லும் பாதைகளில் இருபுறமும் வேம்பு விதைகள் அடங்கிய, விதைப்பந்துகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.சீனிவாசன்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வன அலுவலர்; திரு.எஸ்.பிரபு, இ.வ.ப., ரோட்ராக்ட் கிளப் தலைவர் திரு.ஏ.மணிகண்டன், செயலர் திரு.சி.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் ரோட்ராக்ட் கிளப் ஆப் விஜய் உறுப்பினர்கள், தளிர் நண்பர்கள் குழு ஆகியோர் இணைந்து விதைப்பந்துகளை இருசக்கர மோட்டார் சைக்கிள் வாகனத்தில் சென்று நடவு செய்ய உள்ளதை, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற, நிகழ்ச்சியில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

இதன்மூலம் தற்போது மழை காலமாக இருப்பதால் இவ்விதைகள் பெரிய மரங்களாக உருவாகும். நமது மாவட்டம் முழுவதும் இக்குழுக்கள் மூலமாக 1 இலட்சம் மரங்கள் வளர்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, திண்டுக்கல் மலைக்கோட்டை, முத்தழகுப்பட்டி பிரிவு முதல் ஆர்.வி நகர் வரையுலும், திண்டுக்கல் திருச்சி பைபாஸ் சீலப்பாடி பிரிவு முதல் மதுரை பைப்பாஸ் முடியும் வரையுலும், மானா மூனா கோவிலூர் பரிவு முதல் சிலுவத்தூர் ரோடு, நத்தம் ரோடு, சிறுமலை ரோடு ஆகிய பகுதிகளிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், சத்யா நகர் வழியாக பைபாஸ் வரையிலும் மரங்கள் நடப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தளிர் நண்பர்கள் நடும் குழு தலைவர் திரு.தளிர் சந்திர சேகர், உதவி ஆளுநர் திரு.சி.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்