RTI Commissioner meeting

செ.வெ.எண்:-94/2025
நாள்:-30.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையர் மாண்பமை முனைவர் மா.செல்வராஜ், அவர்கள் தலைமையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையர் மாண்பமை முனைவர் மா.செல்வராஜ், அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தகவல் அளிக்கும் அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் இன்று(30.05.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.செல்வம், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஸ் உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.