RTO Office DGL – Extension
செ.வெ.எண்:-67/2025
நாள்:-22.02.2025
திண்டுக்கல் மாவட்டம்
புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் 28.02.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழகம் முழுவதும் புதிய வழித்டதடங்களில் சிற்றுந்துகள் இயக்கத்தக்க வகையில், அரசினால் புதிய விரிவான திட்டம்-2024 வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்டு 33 புதிய வழித்தடங்களும், பழனி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்டு 12 புதிய வழித்தடங்களும் ஆக மொத்தம் 45 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, இவை திண்டுக்கல் மாவட்ட சிறப்பு அரசிதழ் எண்.7, நாள். 12.02.2025 -ல் அறிவிக்கையாக வெளியிடப்பட்டு, இவ்வழித்தடங்களுக்கான விண்ணப்பங்கள் 24.02.2025 -க்குள் சமர்ப்பிக்க கோரப்பட்டன. தற்போது, விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 28.02.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.