Close

Rural Election 2021

Publish Date : 01/10/2021

செ.வெ.எண்:-02/2021

நாள்:-01.10.2021

தற்செயல் ஊரக உள்ளாட்சி தேர்தல்-2021
முன்னிட்டு மதுபான கடைகளை மூட – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு.

திண்டுக்கல் மாவட்டத்தில் தற்செயல் ஊரக உள்ளாட்சி தேர்தல்-2021 09.10.2021 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, 07.10.2021 திங்கள் கிழமை காலை 10.00 மணி முதல் 09.10.2021 புதன் கிழமை நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்:12.10.2021 செவ்வாய் கிழமை ஆகிய தினங்களில் தற்செயல் ஊரக உள்ளாட்சி தேர்தல்-2021 நடைபெறக் கூடிய பகுதிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் இருந்து 5 கி.மீ சுற்றளவிற்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அருகில் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக் கூடங்கள் (எப்.எல்.1) மற்றும் எப்.எல்.2 முதல் எப்.எல்.11 வரை (எப்.எல்.6 தவிர) மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய தினங்களில் மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது மதுக்கூடம் திறப்பதோ அதனை அப்பகுதியில் எடுத்துச் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. விதியை மீறி செயல்படுபவர்கள் மீது உரிய சட்டம் மற்றும் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.