Close

Skill Training Exam

Publish Date : 05/02/2024

செ.வெ.எண்:-09/2024

நாள்:03.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ், தொழிற்பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, தேர்வில் கலந்துகொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சிபெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத்தொழிற்தேர்வு நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-2019-ல் இரண்டாண்டு தொழிற்பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்துகொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சிபெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத்தொழிற்தேர்வு மார்ச் 2024-ல் (for Semester System only) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, துணைத்தேர்வு தொடர்பாக முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற தொழிற்பயிற்சி நிலையங்களை 15.02.2024 –தேதிக்குள் தொடர்புகொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக்கட்டணத்தை தொழிற்பயிற்சி நிலைய வழிகாட்டுதலின்படி செலுத்தி, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி துணைத்தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும், அகில இந்திய துணைத்தொழிற்தேர்வு மார்ச் 2024, குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற http://skilltraining.tn.gov.in) மற்றும் https://ncvtmis.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.