Close

SKILL TRAINING – ITI Admission

Publish Date : 20/06/2025

செ.வெ.எண்:-69/2025

நாள்:19.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐ.டி.ஐ) ஆகஸ்ட் 2025-ம் ஆண்டுக்கான நேரடிச்சேர்க்கை 17.06.2025 அன்று முதல் நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐ.டி.ஐ) ஆகஸ்ட் 2025-ம் ஆண்டுக்கான நேரடிச்சேர்க்கை 17.06.2025 அன்று முதல் நடைபெற்று வருகிறது.

எனவே, 10-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, புகைப்படம்-5 மற்றும் விண்ணப்பக் கட்டணங்களுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகள் நேரடி சேர்க்கையில் கலந்து பயன்பெறலாம்

மேலும், விவரங்களுக்கு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திண்டுக்கல் – 9965291516, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), திண்டுக்கல் – 9499055763, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஒட்டன்சத்திரம் – 9025155088, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் குஜிலியம்பாறை- 9600827733, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திண்டுக்கல்-0451-2970049 ஆகிய தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டுதெரிந்துகொள்ளலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை ரூ.750 வழங்கப்படும். தமிழ் புதல்வன் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். பயிற்சியில் சேர ஆண்களுக்கான வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை, மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. விலையில்லா பாடப்புத்தகம், சீருடை, மிதிவண்டி, வரைபட கருவிகள் மற்றும் மூடு காலணிகள், இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா சீருடை மற்றும் தையற் கூலி ஆண்டுதோறும் வழங்கப்படும். மத்திய அரசின் NCVT சான்றிதழ் வழங்கப்படும். கட்டணமில்லா உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி உண்டு.

தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் தொழில்பழகுநர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.