Skill training ITI Admission
செ.வெ.எண்:-87/2025
நாள்:-28.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
2025-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in, என்ற இணையதளத்தில் 13.06.2025 வரை விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நான்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பாடப்பிரிவுகள்(Course) மற்றும் தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள் பற்றி அறிய கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொடர்பு எண்கள் விவரம் வருமாறு:-
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திண்டுக்கல் – 9965291516,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), திண்டுக்கல் – 9499055763
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஒட்டன்சத்திரம் – 9025155088
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் குஜிலியம்பாறை- 9600827733
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திண்டுக்கல்- 0451-2970049
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு, மாதந்தோறும் உதவித் தொகை ரூ.750 வழங்கப்படும். தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். பயிற்சியில் சேர ஆண்களுக்கான வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை, மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. விலையில்லா பாடபுத்தகம், சீருடை, மிதிவண்டி, வரைபடக் கருவிகள் மற்றும் மூடு காலணிகள் வழங்கப்படும். இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி ஆண்டுதோறும் வழங்கப்படும். மத்திய அரசின் NCVT சான்றிதழ் வழங்கப்படும். கட்டணமில்லா உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி உண்டு.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து உயர்கல்வி பயின்று பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.