Social Justice Day Pledge
செ.வெ.எண்:-41/2024
நாள்:16.09.2024
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(16.09.2024) சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியினை வாசிக்க அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
அதன்படி, “பிறப்பொக்கும் எல்லா உயரிக்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவதும் கேளிர் என்ற பண்பு நெறியையும், எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத்திறனும், பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக்கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்“ என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி சு.ஜெயசித்ரகலா, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி எம்.ராஜேஸ்வரி சுவி, உதவி ஆணையாளர்(கலால்) திரு.ஆர்.பால்பாண்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) திரு.செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.முருகன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, உட்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.