Special camp to issue identity card for Differently Disabled Persons

Publish Date : 16/09/2019

செ.வெ.எண்:-36/2019 நாள்:- 16.09.2019
திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19.09.2019 அன்று காலை நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை ஒவ்வொரு திங்கள் கிழமை தோறும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை வழங்கப்பட்டு வருகிறது. தொலை தூரங்களில் இருந்து வர இயலாதவர்களுக்காக ஒன்றிய வாரியாக சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19.09.2019 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழ் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து கிராமங்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சியின் அனைத்து வார்டுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படுகிறது. இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவனங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.

ஒட்டன்சத்திரம்; மற்றும் சுற்றுபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் உரிய ஆவனங்களுடன் நேரில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்