SSC Examination coaching
செ.வெ.எண்:-27/2021
நாள்:12.10.2021
Staff Selection Commission தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இணைய வாயிலாக இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்டி, 02.09.2021 அன்று முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் அறிவிக்கப்படவுள்ள தொகுதி-IV (TNPSC Group-IV) காலிப்பணியிடங்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் Staff Selection Commission தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள Advertisement No. Phase-IX/2021/Selection Posts-க்கான நேரடி இலவச பயிற்சி வகுப்பு இவ்வலுவலக வளாகத்தில் 13.10.2021 அன்று முதல் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது திறன்மிக்க வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது, மேலும் மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன.
எனவே, Staff Selection Commission தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள Advertisement No. Phase-IX/2021/Selection Posts-க்கான போட்டித் தேர்விற்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் இந்த அரியவாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள், இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு, தங்களது விவரங்களைப் பதிவு செய்து, பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.