Close

Sub Court inauguration Oddanchatram

Publish Date : 20/12/2021
.

..செ.வெ.எண்:-51/2021

நாள்:18.12.2021

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர்(பொ) திரு.முனிஸ்வர்நாத் பண்டாரி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம்ரூபவ் ஒட்டன்சத்திரத்தில் சார்பு நீதிமன்றத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டம்ரூபவ் ஒட்டன்சத்திரத்தில் சார்பு நீதிமன்றத்தைரூபவ் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர்(பொ) திரு.முனிஸ்வர்நாத் பண்டாரி, அவர்கள் இன்று(18.12.2021) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

இதனைத்தொடர்ந்துரூபவ் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.கே.கல்யாண சுந்தரம் அவர்கள்ரூபவ் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் செல்வி வி.எம்.வேலுமணி அவர்கள், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.வி.பார்த்திபன் அவர்கள், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.எம்.நிர்மல்குமார் அவர்கள், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி ஆர்.என்.மஞ்சுளா அவர்கள், மாண்புமிகு சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் திரு.எஸ்.இரகுபதி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்ரூபவ் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி செல்வி எம்.கே.ஜமுனா அவர்கள், தலைமை நீதித்துறை நடுவர் திருமதி ஜெ.மோகனா அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள்.

இவ்விழாவில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர்(பொ) திரு.முனிஸ்வர்நாத் பண்டாரி, அவர்கள் பேசியதாவது:-
ஓட்டன்சத்திரத்தில் ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றம்ரூபவ் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. தற்போது சார்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோர் தேர்வு
செய்து, அதற்கான பரிந்துரைகளை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தால்ரூபவ் அதை உரிய கவனத்தில்கொண்டு உடனடியாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அதனைத்தொடர்ந்துரூபவ் மாண்புமிகு சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் திரு.எஸ்.இரகுபதி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் இங்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து மக்களுக்கும் விரைந்து நீதி கிடைக்க தேவையான இடங்களில் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம்ரூபவ் வழக்குகளை விரைந்து முடித்து, தாமதமின்றி நீதி கிடைக்க வழிவகை ஏற்படும். வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு, பொதுமக்களுக்கு நீதி கிடைக்க, சேவை புரிய வேண்டும். இவ்வாறு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர்(பொ) திரு.முனிஸ்வர்நாத் பண்டாரி, அவர்கள் பேசினார்கள்.

விழாவில், மாண்புமிகு சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் திரு.எஸ்.இரகுபதி அவர்கள் பேசியதாவது:-
அனைத்து மக்களுக்கும் விரைவாக நீதி கிடைக்கப்பட வேண்டும் என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதன்மையான குறிக்கோள்களில் ஒன்றாகும். தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்கு சமமாகும். நீதி தாமதமாக்க கூடாது என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நீதித்துறைக்கு முன்னுரிமை அளித்துரூபவ் நீதித்துறைக்கு தேவையான கட்டட வசதிரூபவ் மனித ஆற்றல், கணினிமயமாக்குதல் போன்ற கட்டமைப்புகளை நிறைவேற்றி வருகிறார்கள்.

அந்தவகையில், தற்போது ஒட்டன்சத்திரத்தில் சார்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க இடம் தேர்வு செய்துரூபவ் சென்னை உயர்நீதிமன்றம் வழியாக பரிந்துரை செய்தால்ரூபவ் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்ரூபவ் தமிழகத்தில் நீதித்துறையில் பொற்காலத்தை உருகாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். ஏழைகளுக்கு நீதி கிடைப்பதற்கு உதவியாக நீதி நிர்வாகம் நிலைநிறுத்தப்படுவதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம். அதன்மூலமாக, தமிழகத்தில் நீதி நிர்வாகத்தை செம்மையாக கொண்டு செல்ல சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, தமிழக அரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு மாண்புமிகு சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் திரு.எஸ்.இரகுபதி அவர்கள் பேசினார்கள்.

விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்ரூபவ் பேசியதாவது:-
ஒட்டன்சத்திரம் பகுதி பொதுமக்கள்ரூபவ் பழனி சார்பு நீதிமன்றத்தை அணுக வேண்டியது இருந்ததால்,அவர்களுக்கு கால விரயமும், பொருள் செலவும் ஏற்பட்டது. அதனால் ஒட்டன்சத்திரத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்பது இந்தப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை ஆகும். இந்த கோரிக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்ரூபவ் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவை திண்டுக்கல்லில் செயல்பட்டு வந்தன. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில்தான் இந்த 2 நீதிமன்றங்கள் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. தற்போது சார்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரத்தில் தற்போது 3 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுரூபவ் சென்னை உயர்நீதிமன்றம் வழியாக தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்படும்பட்சத்தில். இங்கு ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசினார்கள்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதாரூபவ் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர் திரு.பிரபு, பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆனந்தி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் வழக்கறிஞர் சங்க தலைவர் திரு.வி.பொன்னுசாமி, செயலாளர் திரு.வி.முத்துக்குமார், ஒட்டன்சத்திரம் பார் அசோசியேசன் தலைவர் திரு.வி.பெருமாள், செயலாளர் திரு.ஆர்.முருகானந்தம், நீதித்துறை நடுவர்கள், நீதித்துறை அலுவலர்கள், வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.