Close

Success Story-Monthly incentive to the Barbers – Temples

Publish Date : 19/04/2022

செ.வெ.எண்:-48/2022

நாள்:18.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.5,000 வழங்கும் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 295 பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக சுமார் ரூ.14.51 இலட்சம், பங்குத்தொகையாக சுமார் ரூ.36.85 இலட்சம் வரை வழங்கப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் வாயிலாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டம், திருக்கோயில் நிலங்கள் மீட்பு, முக்கிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் தொடக்கம், ஒரு இலட்சம் தல மரக்கன்றுகள் திருக்கோயில்களில் நடும் திட்டம், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டாச்சாரியார்களுக்கு ரூ.1,000 மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், பல்வேறு திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிகழ்வு, அன்னைத் தமிழில் அர்ச்சனை, தமிழில் அர்ச்சனை செய்வதற்காக 14 போற்றி நூல்கள் வெளியீடு போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2021-22-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, முடிக்காணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. அதற்கான கட்டணத்தில் அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் பங்குத்தொகையை திருக்கோயில் நிர்வாகமே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் 05.09.2021 முதல் அனைத்து திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், 07.09.2021 அன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், திருக்கோயில்களில் பணிபுரியும் தலைமுடி மழிக்கும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாத ஊக்கத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தமிழகம் முழுவதும் திருக்கோயில்களில் பணிபுரியும் 1,744 முடிதிருத்தும் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 ஊக்கத் தொகை அந்தந்த திருக்கோயில்களிலிருந்து வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.10.47 கோடி செலவிடப்படும். இதனால் திருக்கோயில் முடிதிருத்தும் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.அதன்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.10.2021 அன்று சென்னை, வேப்பேரி, பி.கே.என். அரங்கத்தில், திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு ரூ.5,000 மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் மாதந்தோறும் 295 பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மாத ஊக்கத்தொகையுடன் பங்குத்தொகையாக, முடிக்காணிக்கை செலுத்தும் பக்தர் ஒரு நபருக்கு வழங்கப்படும் சீட்டு எண்ணிக்கை அடிப்படையில் குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 295 பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக சுமார் ரூ.14.51 இலட்சம், பங்குத்தொகையாக சுமார் ரூ.36.85 இலட்சம் வரை வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கடந்த காலங்களில் முடிக்காணிக்கைக்கு வரும் பக்தர்களிடம் முடிக்காணிக்கை செலுத்தும் நபருக்கு(ஒரு சீட்டுக்கு) ரூ.30 வசூலித்து, அதில் தொழிலாளர்களுக்கு ரூ.25-ம், திருக்கோயிலுக்கு ரூ.4-ம், பிளேடு ரூ.1 என்ற கணக்கில் திருக்கோயில் நிர்வாகம் வழங்கி வந்தது. தற்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த இலவச முடிக்காணிக்கை திட்டத்தின் கீழ் பக்தர்களிடம் முடிக்காணிக்கைக்கான கட்டணம் வசூலிப்பது இல்லை. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதற்காக பக்தர்களிடம் வசூலிக்கும் கட்டண தொகையை கோயில் நிர்வாகமே வழங்குகிறது.தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு 05.09.2022 முதல் மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் முடிக்காணிக்கை செலுத்தும் பக்தர் ஒரு நபருக்கு(ஒரு சீட்டுக்கான) பங்குத்தொகையாக ரூ.30 வீதம் எத்தனை பக்தர்களுக்கு தலைமுடி மழிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறதோ அதற்கான தொகை சம்பந்தப்பட்ட தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படுகிறது. இது நிரந்தர வருவாய் கிடைத்துள்ளதாக தலைமுடி மழிக்கும் திருக்கோயில் பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதோடு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.