Summer Coaching Camp
செ.வெ.எண்:-42/2023
நாள்:-26.04.2023
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெறும் கோடைக்கால இலவச பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்டம் சார்பாக 2023-24 ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் கோடைக்கால இலவச பயிற்சி முகாம் மாணவ, மாணவிகளுக்கு தகுதி வாய்ந்த பயிற்றுநர்களால் 01.05.2023 முதல் 15.05.2023 வரை 15 நாட்கள் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலையில் 4.00 மணி முதல் 6.30 வரையிலும் நடைபெற உள்ளது.
பயற்சி முகாம், 1.தடகளம், 2.கூடைப்பந்து, 3.கால்பந்து, 4.கையுந்துப்பந்து மற்றும் 5.ஹாக்கி (இருபாலருக்கும்) ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும். கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் 01.05.2023 அன்று காலை 6.00 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் அவர்களை நேரிலோ அல்லது 7401703504 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.