Close

Survey – Notification

Publish Date : 05/02/2024

செ.வெ.எண்:-04/2024

நாள்:01.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்மந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்நேரத்திலும், எவ்விடத்திலிருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும் நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை / வரைபடம் ஆகியவற்றை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணைய வழிச்சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும்.

எனவே , திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்தி பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.