Sveep Awareness (Baloon)

Publish Date : 28/03/2019
1

2 3

செ.வெ.எண்:- 40/2019 நாள்:-28.03.2019
திண்டுக்கல் மாவட்டம்

நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019; முன்னிட்டு, பொதுமக்களை கவரும் வண்ணம் இராட்;சத பலூன் பறக்க விடும் நிகழ்வினை – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இன்று (28.03.2019) பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் இராட்;சத பலூன் பறக்க விடும் விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக வேண்டும் என்பதை வழியுறுத்தி, பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதை வலியுறுத்தியும், பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பர பேனர்கள் அமைத்தும், ஒட்டுவில்லை ஒட்டியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், கல்லூரிகளில் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் மற்றும் உணவகங்கள், கிராமப்புற பகுதிகளில் தெருகூத்து, சுவர் சித்திரம் மற்றும் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் புதுமையான முறையிலும், பொதுமக்களை எளிதில் கவரும் வகையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன்படி, வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நாளன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் இன்று (28.03.2019) இராட்;சத பலூன் பறக்க விடும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாகவும் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் இதுபோன்று பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்;ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இ.சாலிதளபதி, மாவட்ட கால்பந்து கழக தலைவர் திரு.ஜி.சுந்தர்ராஜன், மாவட்ட கால்பந்து கழக செயலாளர் திரு.அரசன் எஸ்.சண்முகம், வலைகோல்பந்து துணைத்தலைவர் திரு.ஆர்.ரமேஷ் பட்டேல், ஜீ.டி.என் கல்லூரி நிர்வாக இயக்குநர் திரு.துரை ரத்தனம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்