Close

SVEEP Awareness for college students

Publish Date : 16/03/2019
5

1 2 3

செ.வெ.எண்:- 20/2019 நாள்:- 16.03.2019
திண்டுக்கல் மாவட்டம்

தேர்தல் நாளான்று சுற்றுலா செல்லாமல் நமது ஜனநாயக கடடையை நிறைவேற்ற வேண்டும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் தேர்தல் விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து, மாணவ, மாணவியர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு, ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் வகையில் நமது நாட்டில் தேர்தல், திருவிழா போல நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்தல் திருவிழாவில் ஒவ்வொரு வாக்காளரையும் பங்கேற்க செய்ய வேண்டும் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும். அதன்படி, வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிக்க செய்ய வேண்டும் என்று அனைத்து விதமான முயற்சி எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக புதிய வாக்காளராகிய கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டு சேர்த்து வருகிறோம்.

18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்வதற்காக கல்லூரியில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பதிவு செய்யாதவர்கள் உங்களின் ஆண்ட்ராய்டு செல்போனின் வாயிலாக கூட வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளும் வசதிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது. நமது நாட்டில் தேர்தல் நடைமுறையில் பல லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தபடுகின்றனர். ரூ.800 கோடிக்கும் மேல் தேர்தலுக்காக செலவிடப்படுகிறது. இதன் நோக்கம் ஒரு வாக்காளர் தனது ஜனநாயக உரிமையான வாக்கினை செலுத்துவதற்கான பணியாகும். தனது ஒரு வாக்கினால் என்னவாக போகிறது என்று நினைக்காமல் உங்களின் வாக்கு உரிமையை சரியான முறையில் செலுத்த வேண்டும். தேர்தல் காலங்களில் கோடை விடுமுறை மற்றும் விடுமுறை நாட்கள் வருவதால் தேர்தல் நாளான்று செளியூர் சுற்றுலா செல்லாமல் தேர்தல் அன்று காலை 7 மணியளவில் கூட உங்கள் வாக்கினை செலுத்திவிட்டு உங்கள் விருப்பம் போல எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நீங்கள் வாக்களிப்பது மட்டும் இன்றி உங்கள் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் வாக்களிக்க செய்ய வேண்டும். மாணவ,மாணவியர்களுக்கு தேர்தல் நடைமுறைகள் குறித்த குறைந்தபட்ச பொது விபரங்களை தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்பதற்காக கல்லூரிகளில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கிய நோக்கமான 100 சதவீதம் வாக்களிப்பின் அவசியம் உணர்ந்து நாம் அனைவரும் தேர்தல் நாளான ஏப்ரல் 18 அன்று வாக்களிப்போம் என்று உறுதி மொழியை எடுத்து கொள்வோம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்;சியில், கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே தேர்தல் தொடர்பான பொதுவான கேள்விகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் கேட்டார். இதற்கு சரியான பதில் அளித்த மாணவ, மாணவியர்களுக்கு சாக்லெட் வழங்கப்பட்டது. மேலும், தேர்தல் விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகள், கையெழுத்து இயக்கம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஷேக்அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., காந்தி கிராம பல்கலைக்கழக பதிவாளர் திரு.சிவக்குமார் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.