SVEEP AWARENESS (Hotels)

Publish Date : 27/03/2019
1

2 3 4

செ.வெ.எண்:- 27/2019 நாள்:-27.03.2019
திண்டுக்கல் மாவட்டம்

நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019; முன்னிட்டு, பொதுமக்களை கவரும் வண்ணம் புதுமையான முறையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இன்று (27.03.2019) திண்டுக்கல் தலப்பாக்கட்டி உணவகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வினை தொடங்கி வைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு, பொதுமக்கள் அனைவரும் 100 வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக, வாக்களார்களை கவருகின்ற வகையில் பழனி பஞ்சாமிர்த பாட்டில்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சிறிய ஒட்டு வில்லைகள் மற்றும் கூட்டுறவுத்துறையின் மூலம் நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்டும், முக்கிய சாலைகளின் சுவர்களில் மாணவ, மாணவியர்களை கொண்டு சுவர் சித்திரங்கள் வரையப்பட்டும் மற்றும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், வீதி நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து, இன்றைய தினம், திண்டுக்கல் உணவு விடுதிகளில் பொதுமக்கள் உணவருந்த அமரும் இடங்களில், உணவு வைக்கப்படும் மேஜைகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய சிறுதளவு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்களில் பொதுமக்கள் உணவருந்திவிட்டு செல்லும் போது, வாக்களர்களாகிய நாங்கள் ஓட்டிற்கு பணம் பெற மாட்டோம் என்ற உறுதி மொழியை ஏற்கும் வகையில், உணவகங்களில் தேர்தல் விழிப்புணர்விற்கென பொருத்தப்பட்டுள்ள மணியை ஒலிக்க செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் பொருத்தப்பட்டுள்ள தொலைகாட்சிகளில் தேர்தல் தொடர்பான விழிப்புர்ணவு குறும்படங்களை ஒளிப்பரப்பவும் அறிவுறுத்தப்பட்டு, பொதுமக்களை ஈர்க்கும் வகையில் புதுமையான முறையில் விழிப்புர்ணவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வாக்களிப்பதன் நமது உரிமை என்பதை உணர்ந்து, நேர்மையான முறையில் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து, நம் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஷேக்அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இ.சாலிதளபதி, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.மு.நடராஜன், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்