Close

SVEEP Awareness

Publish Date : 19/03/2019
1

2 3

செ.வெ.எண்:- 22/2019 நாள்:- 19.03.2019
திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பு நடைபெறும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், 100 சதவீதம் வாக்களிப்பு நடைபெறும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, முதல் முறை வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்களான கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே தேர்தல் நடைமுறை மற்றும் வாக்களிப்பு குறித்து புதிர் போட்டிகள், ஓவிய போட்டிகள், கோலப்போட்டிகள், விளையாட்டுப்போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதே போன்று கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கு தேர்தல் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு கல்லூரி விரிவுரையாளர் ஒருவரை ஒருங்கிணைப்பாளராகம், இரண்டு மாணவ, மாணவியர்களை வளாக தூதுவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், விளையாட்டு சங்கங்கள் மூலமாக பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வுகள் குறித்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதே போன்று மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் களப்பணியாளர்கள் மூலமாக கிராமங்கள் தோறும் நேர்மையான வாக்களிப்பு குறித்து மகளிர்களிடையே பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், கிராமங்கள் தோறும் தெருக்கூத்து மூலமாக வாக்களிப்பின் அவசியம் குறித்து கலைநிகழ்ச்சிகள் நடத்த 3 கலைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு தினந்தோறும் மக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களான காய்கறி சந்தை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, கடந்த தேர்தல்களில் குறைவாக வாக்குப்பதிவு நடந்த இடங்களில் கூடுதலாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், 100 நாள் வேலை திட்ட பணியில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மற்றும் தனியார் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களிடமும் 100 சதவீதம் வாக்களிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்கினை நேர்மையான முறையில் வாக்களிக்களிப்பதற்கான அனைத்து விழிப்புணர்வு பணிகளும் சிறப்பான முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.