Close

Sveep Awarness (Disabled)

Publish Date : 22/03/2019
irs1

செ.வெ.எண்:- 29/2019 நாள்:-22.03.2019

irs6

திண்டுக்கல் மாவட்டம்அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கென சக்கர நாற்காலிகள் மற்றும் சாய்வு தளங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களை அழைத்துச் செல்வதற்கு, தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் சார்பில், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக வேண்டும் என்பதை வழியுறுத்தி, பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதை வலியுறுத்தியும், பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து முக்கிய இடங்களில் விளம்பர பேனர்கள் அமைத்தும், ஒட்டுவில்லை ஒட்டியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் தேர்தல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வுகளில் மாற்றுத்திறனாளிகள் தங்களது பங்களிப்பை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் குறித்தும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், வருகின்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமமுமின்றி வாக்களிக்கும் வகையில், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கென சக்கர நாற்காலிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்துச் சென்று வாக்குப்பதிவு செய்வதற்கு, அரசியல் சார்பற்ற, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வாக்களி;க்கும் வாக்காளர்களின் சின்னத்தை எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பிரெய்லி புக் அமைக்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 10ஆயித்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து, முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு பேனர்கள் அமைக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வாக்களிப்பதன் நமது உரிமை என்பதை உணர்ந்து, நேர்மையான முறையில் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து, நம் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தேர்தல் செலவின பார்வையாளர் திரு லோகேஷ் குமார் ஜெயின், I.R.S., Customs,Mumbai, உதவி ஆட்சியர்(பயிற்சி) திரு.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., மாநகர் நல அலுவலர் மரு.அனிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இ.சாலி தளபதி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்