Close

Sveep Awareness Ulavar Santhai

Publish Date : 26/03/2019
123456789

1 2

செ.வெ.எண்:- 26/2019 நாள்:-26.03.2019
திண்டுக்கல் மாவட்டம்

நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019; அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், உழவர் சந்தை காய்கறி மார்கெட்டில் கலை நிகழ்ச்சிகள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இன்று (26.03.2019) திண்டுக்கல் திருச்சி சாலையில் உள்ள உழவர் சந்தை காய்கறி மார்கெட்டில் கலை நிகழ்ச்சிகள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த பொது தேர்தல்களில் குறைவாக வாக்குபதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் அதிக அளவில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஒவ்வொரு கிராமங்களில் மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் களபணியாளர்கள் மூலமாக மகளிர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள், விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு கிராமங்கள் தோறும் வீடு வீடாக சென்று வாக்களிப்பு அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கலைநிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு கிராமங்கள் தோறும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக வேண்டும் என்பதை வழியுறுத்தி, பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதை வலியுறுத்தியும், பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் அனைத்து முக்கிய இடங்களில் விளம்பர பேனர்கள் அமைத்தும், ஒட்டுவில்லை ஒட்டியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் தேர்தல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்றைய தினம் திண்டுக்கல் உழவர் சந்தையில் விவசாயிகள் வணிகர்கள் மூலமாக தினந்தோறும் காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்;டது. மேலும், காய்கறிகளால் தேர்தல் நாள் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இளைய தலைமுறைகளிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் 100 சதவீதம் பெற்றோர்கள் வாக்களிப்போம் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் விண்ணப்ப படிவங்களை வழங்கியும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வாக்களிப்பதன் நமது உரிமை என்பதை உணர்ந்து, நேர்மையான முறையில் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து, நம் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப., அவர்கள்; தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஷேக்அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.மனோகரன், தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.சீனிவாசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்