மூடு

அகில இந்திய தொழிற்பழகுநர் பயிற்சிக்கான ஆன்லைன் தேர்வு 04-09-2021 முதல் 08-09-2021 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 19/07/2021

செ.வெ.எண்:32/2021

நாள்:19.07.2021

திண்டுக்கல் மாவட்டம்

அகில இந்திய தொழிற்பழகுநர் பயிற்சிக்கான ஆன்லைன் தேர்வு 04-09-2021 முதல் 08-09-2021 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

111 வது அகில இந்திய தொழிற்பழகுநர் பயிற்சிக்கான (Online) தேர்வு 04-09-2021 முதல் 08-09-2021 வரை நடைபெற இருப்பதால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற் நிறுவனங்களில் தொழிற்பழகுநர் பயிற்சியை 15.04.2021 வரை பயிற்சி முடித்த தொழிற்பழகுநர்கள் ஆன்லைன் தேர்விற்கான பதிவுகளை 24.07.2021 முதல் 10.08.2021 க்குள் IBM Portal-லில் தங்களது நிறுவனத்தின் மூலமாக பதிவுகள் செய்து கொள்ளுமாறும், மேலும் 110 வது அகில இந்திய தொழிற்பழகுநர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் தாங்கள் தொழிற்பழகுநர் பயிற்சி மேற்கொண்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு தேர்வினை எழுத IBM PORTAL-ல் www.apprenticeshipindia.org என்ற இணையதள முகவரியில் பதிவுகள் செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திண்டுக்கல் அவர்களை நேரிலோ (அ) தொலைபேசி எண் 0451-2970049 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.