மூடு

அனைத்து குறைதீர்க்கும் கூட்டங்களும் 31.03.2020 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர்

வெளியிடப்பட்ட தேதி : 23/03/2020

செ.வெ.எண்:-26ஃ2020 நாள்:20.03.2020
திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில்; கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து குறைதீர்க்கும் கூட்டங்களும் 31.03.2020 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

————————————————————————————————————————————-

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலத்தில் திங்கள்கிழமைதோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கிராமப்புறப் பகுதிகளில் நடத்தப்படும் மக்கள் தொடர்பு முகாம்கள், வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அம்மா திட்ட முகாம்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு பதிவு மையம் மற்றும் பொது சேவை மையங்கள் போன்ற போன்றவை கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக 31.03.2020 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் தங்களுக்கு அவசரமான கோரிக்கை ஏதுமிருப்பின் அதுகுறித்த விவரங்களை collrdgl@nic.in மின்னஞ்சல் முகவரிக்கோ, 75988 66000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்தி மூலமாகவோ, 0451-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவோ அல்லது 0451-2460320 என்ற தொலைபேசி மூலமாகவோ அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————————————————————-
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
—————————————————————————————————————————————————————————————-